விவசாய கடன் தள்ளுபடியாகுமா?- கர்நாடகாவில் இன்று பட்ஜெட் தாக்கல்

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2018 09:32 am
cm-kumarasamy-to-present-karnataka-budget-today

கர்நாடக முதல்வர் குமாரசாமி இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இதில் விவாசயக்கடன் தள்ளுபடி செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

கர்நாடகாவில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி  அமைக்கப்பட்டுள்ளது. மஜத.வை சேர்ந்த குமாரசாமி முதல்வராகவும், காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வர் துணை முதல்வராகவும் உள்ளனர். முதல்வர் குரசாமியிடமே நிதித்துறையும்  உள்ளது. இந்த கூட்டணி ஆட்சி, 2018-19ம் நிதியாண்டுக்கான தனது முழு பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறது. முதல்வர் குமாரசாமி இதை தாக்கல் செய்கிறார்.  கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் என்பதால், இதில் பல்வேறு புதிய திட்டங்கள், சலுகைகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

குறிப்பாக, விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பு இதில் இடம் பெறலாம் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வதில் பல்வேறு முட்டுக்கட்டைகள் இருந்தன. குறிப்பாக, காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்வர் சித்தராமையா முழு  அளவிலான பட்ஜெட்டை தாக்கல் செய்யக்கூடாது என்றும், தேர்தலுக்கு முன்பு தான் தாக்கல் செய்த பட்ஜெட்டையே பின்பற்ற வேண்டும் என்றும்  வலியுறுத்தினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலையிட்டதால், இந்த பிரச்னை முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close