டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் தொடங்கியது!

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2018 12:30 pm

cauvery-regulatory-meeting-is-held-at-new-delhi

டெல்லியில் மத்திய அரசின் தலைமை பொறியாளர் நவீன்குமார் தலைமையில் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 2ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் அதன் தலைவர்  மசூத் ஹுசைன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் ஜூலை மாதம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவிட்டது. 

இதையடுத்து மத்திய நீர்வளத்துறை தலைமை பொறியாளர் நவீன்குமார் தலையில் இன்று டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.  தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில தலைமை பொறியாளர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். தமிழகம் சார்பில் தலைமை பொறியாளர் செந்தில்குமார் பங்கேற்றுள்ளார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.