'ஸ்கர்ட் சைஸ் இவ்வளவுதான்' - விநோத உடைக்கட்டுப்பாடு போட்ட பள்ளி!

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2018 03:48 pm

pune-school-issues-directive-for-color-of-inner-wear-to-girl-student

புனேவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள உடை கட்டுப்பாடு குறித்த அறிவிப்பு மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரத்தில் எம்.ஐ.டி விஸ்வசாந்தி குருகுலம் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் நடப்பு  கல்வியாண்டுக்கான பள்ளி விதிமுறைகள் அடங்கிய விளக்கக்குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதில், மாணவிகள் எந்த நீளத்துக்கு ஸ்கர்ட் (குட்டைப்பாவாடை) அணிய வேண்டும் என்பது முதற்கொண்டு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "உள்ளாடைகளை பொறுத்தமட்டில்  வெள்ளை அல்லது ஸ்கின் கலர் மாட்டும் தான் போட வேண்டும். இது தவிர வேறு கலரில் உள்ளாடை அணிந்தால் வெளியில் தெரியும்படியாக இருக்கும். இதனால் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும். இந்த விதிமுறைகளை பின்பற்றாத மாணவிகள் பள்ளியில் இருந்து நீக்கப்படுவார்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர, மாணவிகள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ஓய்வறைக்கு செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதன் உச்சகட்டமாக, இந்த விதிமுறைகள் அனைத்திற்கும் ஒத்துக்கொள்வதாக பெற்றோர்கள் கையொப்பமிட்டு ஒப்புதல் தெரிவிக்கவேண்டும் எனவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பெற்றோர்கள் இணைந்து பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர். 

பின்னர் இதுகுறித்து எம்.ஐ.டி கல்வி குழும செயல் இயக்குநரான சுசித்ரா விளக்கமளித்துள்ளார். அவர், "எங்கள் நோக்கம் மிகவும் புனிதமானது. இதில் எந்த மறைவான நோக்கமும் இல்லை. மாணவிகளையும், பெற்றோர்களையும் கஷ்டப்படுத்துவதற்காக அல்ல. இதற்கு முன்பாக நடந்த  சில சம்பவங்களின் அடிப்படையிலும், மாணவிகளின் பாதுகாப்பு கருதியும் தான் இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம்" என தெரிவித்துள்ளார். 

ஓய்வு அறைபயன்படுத்தவது பற்றி கேட்கையில்,  "சில மாணவிகள் வகுப்பு நேரத்தில் ஓய்வறைக்கு செல்வதாகக் கூறிவிட்டு, நீண்ட நேரம் அங்கேயே இருக்கின்றனர். மாணவிகள் மத்தியில் ஒழுங்கை கொண்டுவரும் நோக்கில்தான் ஓய்வு அறையை குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்றார்.

ஆயிரம்தான் சமாதானம் சொன்னாலும், பள்ளி நிர்வாகம் சொல்லும் காரணம் எதுவும் ஏற்புடையதாக இல்லை. ஓய்வு அறைக்கு செல்வது அவரவர் உடல்நிலையைப் பொருத்தது. இதில் கூட கட்டுப்பாடு விதிப்பது என்பது சரியில்லை... மேலும் இந்தி புதிய விதிமுறைகளை ஏற்கவில்லை என்றால் பள்ளியை விட்டு நீக்குவோம் என்று மிரட்டுவது அராஜகத்தின் உச்சம் என்று பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரச்னை பெரிதாகவே இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார். இது குறித்து,  பெற்றோர் பலரும் மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, விசாரணை நடத்த ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை மாவட்ட துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close