மணமேடையில் இளைஞரை 'பளார்' விட்ட மணப்பெண்; அதிர்ந்து போன மாப்பிள்ளை!

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2018 05:27 pm

when-an-indian-bride-slapped-a-man-who-lifted-her-during-varmala-ceremony

வட இந்தியாவில் மணமேடையில் வைத்து இளைஞர் ஒருவரை மணப்பெண் கன்னத்தில் அறைந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

வட இந்தியாவில் நடந்த ஒரு திருமணத்தில் மணமக்கள் இருவருக்கும் மாலை மாற்றும் நிகழ்வு நடைபெற்றது. அந்த சமயத்தில், திருமணமத்தில் மகிழ்ச்சியைக் கூட்டுகிறேன் என்று, மணமகனை அவரது தோழன் தோளில் தூக்கினார். மணமகன் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் அவர் தோளில் தூக்கினார். 

அந்த சமயத்தில் மணமகளையும் தூக்கினால் தான் மாலை போட முடியும் என்பதால், அருகில் இருந்த ஒருவர் அவசரப்பட்டு மணமகளை தூக்கியுள்ளார். மணமகனுக்கு மாலை போட்டுவிட்டு கீழே இறங்கிய மணமகள், இறங்கிய வேத்தில் தன்னைத் தூக்கிய நபர் பளார் என்று கன்னத்தில் அறைந்தார். மணமகன் உள்பட அருகில் இருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். வந்திருந்த விருந்தினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். 

அறை வாங்கிய அந்த நபர் கோபத்தில் அருகில் இருந்த மணப்பெண் தோழியை கன்னத்தில் அடித்துவிட்டு மேடையை விட்டு இறங்கினார். அவர்தான் மணமகளை தோளில் தூக்கும் ஐடியாவைக் கொடுத்திருப்பார் போல... இதனால், அந்த பெண் அதிர்ச்சியடைந்தார். இதனால், திருமண வீட்டில் மகிழ்ச்சி மறைந்து ஒருவித இருக்கமான நிலையே நீடித்தது.

அனுமதியின்றி தன்னை தூக்கியதால் தான் அவரை அறைந்ததாக மாப்பிள்ளையிடம் மணப்பெண் கூறியுள்ளார். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close