விவசாய கடன் தள்ளுபடி; பெட்ரோல் டீசல் விலை உயர்வு: குமாரசாமியின் முதல் கர்நாடக பட்ஜெட்!

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2018 09:53 pm
kumaraswamy-waives-off-farmer-loans

கர்நாடக முதல்வர் குமாரசாமி, அம்மாநிலத்தில் வைக்கப்பட்டு வந்த முக்கிய கோரிக்கையான விவசாய கடன் தள்ளுபடியை இன்று தனது முதல் பட்ஜெட்டில் அறிவித்தார். 

நடந்து முடிந்த கர்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலில், விவசாய கடன் தள்ளுபடி முக்கிய அம்சமாக அமைந்தது. மத்திய அரசிடம் நீண்டகாலமாக விவசாய கடனை தள்ளுபடி செய்ய கோரிக்கை வைத்து வைக்கப்பட்டு வந்த நிலையில், புதிய முதல்வர் குமாரசாமி, தனது முதல் பட்ஜெட்டில், விவசாய கடன் தள்ளுபடிக்காக ரூ.34,000 கோடி ஒதுக்கியுள்ளார். அதேநேரம், பெட்ரோல், டீசல் மற்றும் மது மீது கூடுதல் வரிகளை விதித்துள்ளார். பெட்ரோல் விலை 1.14 ரூபாயும், டீசல் விலை 1.12 ரூபாயும் அதிகரிக்கப்படுகிறது. 

சட்டமன்றத்தில் அவர் பேசியபோது, "விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய ரூ.34,000 கோடி ஒதுக்கப்படுகிறது. அதில், ஒரு குடும்பத்திற்கு 2 லட்சம் என்ற ரீதியில் பிரித்துக் கொடுக்கப்படும். 2017 டிசம்பர் 31ம் தேதி வரை பெறப்பட்ட அனைத்து பயிர்கடன்களும் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். முதற்கட்டமாக மாவட்ட மற்றும் மாநில கூட்டுறவு வங்கிகளில் பெறப்படும் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்" என்றார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close