மல்லையாவுக்கு 'செக் மேட்'; சொத்துக்களை பறிமுதல் செய்ய பிரிட்டன் கோர்ட் உத்தரவு

  Newstm News Desk   | Last Modified : 06 Jul, 2018 07:06 am

british-court-orders-to-cease-mallya-s-assets

9000 கோடி ரூபாய் வங்கிகளிடம் கடன் மோசடி செய்து வெளிநாடு தப்பிய தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பிரிட்டன் சொத்துக்களை பறிமுதல் செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

13 வங்கிகளிடம் சுமார் 9000 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, திருப்பி செலுத்தாமல் பிரிட்டன் தப்பிச் சென்றார் பிரபல தொழிலதிபர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் மல்லையா. அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய இந்திய நீதிமன்றம் உத்தரவிட நிலையில், மல்லையாவை கைது செய்து இந்தியா கொண்டு வர அரசு முயற்சி செய்து வருகிறது. 

சமீபத்தில் தனது சொத்துக்களை வைத்து கடன்களை திருப்பி அடைக்க உள்ளதாக மல்லையா தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவரது சொத்துக்களை பறிமுதல் செய்வது தொடர்பாக பிரிட்டன் நீதிமன்றத்தில் 13 வங்கிகள் சார்பாக தொடரப்பட்ட வழக்கில், வங்கிகளுக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில், மல்லையா தற்போது வசித்து வரும் இடத்திற்கு அதிகாரிகள் சென்று சோதனை நடத்தலாம் என்றும், அங்குள்ள பொருட்களை பறிமுதல் செய்யலாம் என்றும் கூறியுள்ளனர். 

இதுதவிர மல்லையாவை நாடுகடத்த இந்திய அரசு தொடர்ந்துள்ள வழக்கு இந்த மாத இறுதியில் விசாரணைக்கு வருகிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close