காஷ்மீர் காவலர் கடத்தி கொலை; தீவிரவாதிகள் அட்டூழியம்

  Newstm News Desk   | Last Modified : 06 Jul, 2018 08:16 am

kashmir-terrorists-abduct-and-kill-police-constable

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர், சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

காஷ்மீரின் ஷோபியான் பகுதியை சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தீவிரவாதிகளால் நேற்று கடத்தப்பட்டார். ஒரு மருந்தகத்திற்கு சென்ற அவரை திடீரென அங்கு வந்த தீவிரவாதிகள் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. ஜாவேத் அஹ்மத் தார் என்ற அந்த காவலரை கண்டுபிடிக்க, ஜம்மு காஷ்மீர் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று காலை அவரது உடல் குண்டுகள் பாய்ந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் காஷ்மீரில் வன்முறை சம்பவங்களும், தீவிரவாத செயல்களும் அதிகரித்ததால், அம்மாநில அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை பாரதிய ஜனதா வாபஸ் பெற்றது. இதைத் தொடர்ந்து மெஹ்பூபா முஃப்தியின் ஆட்சி கவிழ்ந்தது. இந்நிலையில், மேலும் ஒரு கான்ஸ்டபிள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதேபோல, அவுரங்கசீப் என்ற ராணுவ வீரரை தீவிரவாதிகள் கடந்த மாதம் கடத்தி கொலை செய்தது குறிப்பிடத்தக்கது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close