வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கே: உச்ச நீதிமன்றம் அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 06 Jul, 2018 11:15 am
cji-is-the-master-of-the-roster-and-first-among-equals

உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டுமே உள்ளது என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்ததுள்ளது.

தலைமை நீதிபதி வழக்குகளை ஒதுக்குவதற்கு எதிராக மத்திய முன்னாள் அமைச்சர் சாந்தி பூஷண் தொடர்ந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிக்ரி, அசோக் பூஷன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  விசாரணை முடிவில் நீதிபதிகள், வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு தான் உள்ளது என அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளனர்.  

மேலும், "உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு என்று ஒரு சில அதிகாரங்கள் உள்ளன. யாருக்கு எந்த வழக்குகளை ஒதுக்க வேண்டும் என்பது அவருக்கே உரிய அதிகாரம். உச்ச நீதிமன்ற விதிமுறைகளின்படி தான் அவர் வழக்குகளை ஒதுக்கி கொடுக்கிறார். உச்ச நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளுக்கெல்லாம் தலைவர் தலைமை நீதிபதி தான்" என தெரிவித்துள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close