சத்தீஸ்கரில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

  Newstm Desk   | Last Modified : 06 Jul, 2018 06:13 pm
three-maoists-killed-in-chhattisgarh-gunbattle-cop-injured

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா, சுக்மா ஆகிய பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் காணப்படும். இதனால் போலீசார்  அங்கு தீவிர பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று நக்சலைட்டுகள் ஊடுருவியதாக வந்த தகவலையடுத்து,  தண்டேவாடா-சுக்மா எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  அப்பகுதியில் நக்சலைட்டுகள் இருப்பதை உறுதி செய்த பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது தொடர் தாக்குதலை நடத்தினர். இதில் 3  நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். மேலும்,பாதுகாப்பு  படையினரில் ஒரு வீரர் காயமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close