ராகுல்காந்தி போதைப்பொருளுக்கு அடிமையானவர்- சுப்ரமணியன் சுவாமி

  ஐஸ்வர்யா   | Last Modified : 06 Jul, 2018 10:06 pm

rahul-gandhi-takes-cocaine-will-fail-dope-test-alleges-subramanian-swamy

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு மருத்துவ பரிசோதனை செய்தால் அதில் அவர் தோற்றுவிடுவார்; ஏனெனில் அவர் போதை பொருள் பயன்படுத்துவது தெரியவந்துவிடும், என்று சுப்ரமணியன் சுவாமி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

பஞ்சாப் மாநிலத்தில் அம்ரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் போதைப் பொருள் புழக்கமும்,  கடத்தப்படுவதும் தொடர்ந்து அதிகரித்துவந்தது. இதைத் தடுக்க அம்மாநில அரசு போதை பொருட்களை கடத்துபவருக்கு மரண தண்டனை கொடுக்கும் சட்டத்திற்கு மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்டுள்ளது. 

இந்நிலையில் பஞ்சாப் அரசு ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அந்த பரிசோதனையில் அவர்கள் போதை பொருட்களை பயன்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.   

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, “பஞ்சாப் மாநில முதலமைச்சர் அரசு ஊழியர்கள் மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்ளும்படி கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இந்த சோதனையை ராகுல்காந்திக்கு முதலில் செய்ய வேண்டும். ஏனெனில் அவர்தான் கொக்கைன் போதைப்பொருள்களை பயன்படுத்துகிறார், அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்தால் அவர் போதைபொருள் பயன்படுத்துவது தெரியவந்துவிடும். அவர்தான் 70% பஞ்சாபியர்கள் போதைக்கு அடிமையானவர்வள் என்று சொன்னவர்” என தெரிவித்துள்ளார். 


 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close