திருப்பதி: ஆகஸ்டு 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை பக்தர்கள் அனுமதி இல்லை!!  

  சுஜாதா   | Last Modified : 07 Jul, 2018 08:37 am

tirupati-temple-may-shut-for-five-days

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 ஆண்டுகள் கழித்து  வருகிற ஆகஸ்டு 16-ந் தேதி மகா சம்ப்ரோஷ்ணம் எனும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதன் அடிப்படையில் ஆகஸ்டு 12-ந் தேதி முதல் 16-ம் தேதி வரை மூலவரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

அனைத்து கோவில்களிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறும். அதன்படி வருகிற  ஆகஸ்டு 16-ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கும்பாபிஷேகம்நடைபெற உள்ளது. இதற்காக 150-க்கும் மேற்பட்ட வேதபண்டிதர்கள் வேதமந்திரங்கள் முழங்க இந்த பூஜைகளை நடத்துகின்றனர். கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் இந்த பூஜைகள் நடத்தப்படுகிறது.  யாகசாலை பூஜைகள் முடிந்த பின்னர் 16-ந் தேதி காலை 10.16 மணியளவில் துலா லக்னத்தில் மூலவர் சன்னதி உள்பட அனைத்து சன்னதிகளிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.

அதனை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடக்கிறது. இந்த தகவலை தேவஸ்தான துணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜூ தெரிவித்துள்ளார். 

Advertisement:
[X] Close