பிரதமர் மோடி இன்று ராஜஸ்தான் பயணம்; திட்டங்களை துவக்கி வைக்கிறார்!

  Newstm Desk   | Last Modified : 07 Jul, 2018 09:15 am
months-before-rajasthan-polls-pm-modi-to-launch-13-big-projects-today

பல்வேறு நலத்திட்டப்பணிகளை துவக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று ராஜஸ்தான் செல்ல இருக்கிறார். 

ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் பொருட்டு பிரதமர் மோடி இன்று ராஜஸ்தானுக்கு விஜயம் செய்கிறார்.  ரூ.722 கோடி மதி்ப்பிலான பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார்.

பிரதமரின் வருகையையொட்டி ஜெய்ப்பூர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.பிரதமரின் வருகையையொட்டி 2 ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் செல்லும் இடங்களில் எல்லாம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

அரசின் நலத்திட்டங்களை பெறும் பயனாளிகளை ஜெய்ப்பூர் நகரில் உள்ள அமருதன் கா பாக் மைதானத்துக்கு அழைத்து வர 5,579 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close