சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் சசி தரூர் இன்று ஆஜர்!

  Newstm Desk   | Last Modified : 07 Jul, 2018 09:15 am

shashi-tharoor-to-appear-in-court-today-in-sunanda-pushkar-death-case

சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் சசி தரூர் இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.
    
முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சஷி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், இதையடுத்து, அவரது உள்ளுறுப்புகள் தடயவியல் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டன. சோதனை முடிவில் அவரது உடலில் விஷம் கலந்துள்ளது தெரிய வந்தது.

இது தொடர்பான வழக்கில் சசி தரூர் மீது போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். ஜூலை 7ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சஷி தரூருக்கு டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பியிருந்தது. விசாரணையின் போது கைது செய்யப்படலாம் என்று கருதி,  சசி தரூர் முன் ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சஷி தரூர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவர் வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து இன்று சசி தரூர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராக இருக்கிறார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close