காஷ்மீர் துப்பாக்கிச்சூடு: 16 வயது சிறுமி உள்பட 3 பேர் பலி!

  Newstm Desk   | Last Modified : 07 Jul, 2018 02:10 pm
teenage-girl-2-others-killed-in-kashmir-as-forces-fire-at-stone-throwers

காஷ்மீரில் இன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் 16 வயது சிறுமி உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர். 

இந்திய வடஎல்லையான காஷ்மீரில் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர். மேலும், பயங்கரவாதிகளால் தூண்டி விடப்பட்ட இளைஞர்களின் கல்லெறி சம்பவங்களும் அதிகமாக காணப்படுகின்றன. இந்த நிலையில், இன்று காஷ்மீர் குல்காம் பகுதியில் இந்திய ராணுவப்படையினர் தீவிர பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வந்த போராட்டக்காரர்கள் சிலர் கற்களை வீச ஆரம்பித்தனர்.இதையடுத்து வீரர்கள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில்  16 வயது சிறுமி மற்றும் இருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது.


 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close