வருடத்திற்கு இரண்டு முறை நீட் தேர்வு! அமைச்சர் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 07 Jul, 2018 02:41 pm
neet-exam-will-be-conducted-two-times-per-year-says-minister-prakash-javadekar

நீட் தேர்வு பிப்ரவரி, மே ஆகிய மாதங்களில் வருடத்திற்கு இரண்டு முறை தேர்வு நடத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். 

இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர், "நீட், ஜேஇஇ (மெயின்), யூஜிசி- நெட், ஜிபேட் மற்றும் பிற போட்டித் தேர்வுகளை தேசிய தேர்வுகள் முகமை நடத்தும். மேலும், அனைத்து தேர்வுகளும் கணினியில் தான் நடத்தப்படும். கணினி பற்றி தெரியாத மாணவர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் பயிற்சி அளிக்கப்படும். 

நீட் தேர்வு பிப்ரவரி, மே ஆகிய மாதங்களில் வருடத்திற்கு இரண்டு முறை தேர்வு நடத்தப்படும். இதன் மூலம் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள உதவும்" என்றார்.
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close