கொலை செய்த கும்பலுக்கு மாலை அணிவித்து வரவேற்ற அமைச்சர்

  ஐஸ்வர்யா   | Last Modified : 08 Jul, 2018 06:26 pm
jayant-sinha-responds-after-row-over-feting-lynching-convicts

இறைச்சி வியாபாரியை அடித்துக் கொன்ற விவகாரத்தில் ஜாமினில் வெளிவந்த குற்றவாளிகளுக்கு மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா மாலை அணிவித்து மரியாதை செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம்  ராம்காரில் உள்ள ஹாசாரிபாக் பகுதியில் பசுகாவலர்கள் என்ற பெயரில் மாட்டிறைச்சி கடத்தப்பட்டதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் இறைச்சி வியாபாரியான அலிமுதீன் அன்சாரி என்பவரை ஒரு கும்பல் அடித்து கொலை செய்தனர். இறைச்சி கடத்தப்பட்டதாக கூறப்படும் வாகனத்திற்கும் தீ வைத்தனர். இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த விரைத்த நீதிமன்றம் 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.

இதையடுத்து அவர்கள் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது, இதனை விசாரித்த நீதிமன்றம் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை தடை செய்து நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர். ஜாமீனில் வெளிவந்துள்ள குற்றவாளிகளுக்கு மத்திய அமைச்சராக உள்ள பா.ஜனதா எம்.பி. ஜெயந்த் சின்ஹா மாலை அணிவித்து மரியாதையை செலுத்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். 

இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில், “குற்றவாளிகளை வரவேற்பதால் நான் இந்த சம்பவத்திற்கு ஆதரவாளன் அல்ல, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர். நீதிமன்றமே குற்றவாளிகளின் தண்டனையை தடை செய்துள்ளது. எனக்கு நீதி அமைப்பின் மீது நம்பிக்கை உள்ளது, அதேபோல் சட்டத்தின் மீதும் ஆட்சியின் மீதும் நம்பிக்கை உள்ளது” என பதிவிட்டுள்ளார்.


 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close