பா.ஜ.கவை வீழ்த்த காங்கிரஸுடன் செயல்பட தயார்: மம்தா பானர்ஜி

  Newstm Desk   | Last Modified : 08 Jul, 2018 10:21 am
ready-to-work-with-congress-to-defeat-bjp-mamata-banerjee

பா.ஜ.கவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட தயார் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார். 

திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வருமான மம்தா பேனர்ஜி சமீபத்தில் அளித்த பேட்டியில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படுவது பற்றி பேசி உள்ளார். அவர், "காங்கிரஸ் தலைமையைப் பொருத்தவரையில் ராஜிவ் காந்தி, சோனியா காந்தி ஆகியோருடன் எனக்கு நல்ல பழக்கம் இருந்தது. அக்கட்சியின் தற்போதைய தலைவரான ராகுல்காந்தி இளையவர் என்பதால் அவர் குறித்து என்னால் எதுவும் கூற இயலாது.

சாதாரண அரசியல் வாதியாக இருந்த நான் பல போராட்டங்களுக்கு பிறகு மூத்த அரசியல் வாதியாகியுள்ளேன். 7 முறை எம்.பி.யாகவும், 2 முறை எம்.எல்.ஏ.வாகவும், 2 முறை முதல்வராகவும் இருந்திருக்கிறேன்.

எந்த ஒரு கட்சியின் நோக்கம், சித்தாந்தம், கொள்கை ஆகியவை தெளிவாக இருக்கும் பட்சத்தில் அந்தக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அனைவருடனும் இணைந்து செயல்படுவதே எனது நோக்கமாகும். பா.ஜ.க அராஜகம் செய்வதோடு மக்களை துன்புறுத்துகிறது. பா.ஜனதாவைச் சேர்ந்த சிலரே அந்தக் கட்சியை ஆதரிப்பதில்லை. 100 ஹிட்லர்கள் சேர்ந்தார் போல் செயல்படுகிறது. அக்கட்சியை வீழ்த்த காங்கிரசுடன் இணைந்து போட்டியிடுவதில் எந்த தயக்கமும் இல்லை" என்றார். 

மேலும், "கூட்டணி கூட்டாட்சியை பொருத்த வரையில் அது எனது தனிப்பட்ட முடிவாக இருக்காது. அது அனைத்து மாநிலக் கட்சிகளின் முடிவாகவும் இருக்க வேண்டும். சில மாநில கட்சிகள் தங்களது மாநிலத்தில் இருக்கும் நெருக்கடி காரணமாக காங்கிரசுக்கு ஆதரவு அளிக்காமல் இருக்கலாம். அவர்கள் மீது நான் குற்றம் சுமத்தவில்லை.

மாறாக பா.ஜ.கவுக்கு எதிராக இணைந்து பணியாற்றுவோம் என்றுதான் கூறுகிறேன். ஒரு சில இடங்களில் காங்கிரசுக்கு செல்வாக்கு இருக்கலாம். ஒரு சில இடங்களில் மாநில கட்சிகள் அதிகாரம் படைத்ததாக இருக்கலாம். அதற்கு ஏற்ப முன்னுரிமை அளிப்போம். டிஎதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து மெகா கூட்டணி ஏற்பட சாத்தியக் கூறுகள் உள்ளன" என்றார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close