காங்கிரஸ் ஒரு ஜாமீன் வண்டி- மோடி விமர்சனம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 08 Jul, 2018 08:17 pm
congress-is-now-known-as-bail-gaadi-pm-modi

காங்கிரஸ் கட்சியை ஜாமீன் வண்டி என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி உரையாற்றினார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பலர் ஜாமீனில் இருப்பதாக குறிப்பிட்ட அவர், அந்த கட்சியை மக்கள் ஜாமீன் வண்டி என அழைக்கத் தொடங்கி இருப்பதாக கூறினார். 

ராணுவத்தின் பலம் குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்புவதாக கூறிய பிரதமர், ஒரே பதவி, ஓரே ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதில் இருந்த பிரச்னைகளை மத்திய அரசு களைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். 2022ல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்றும் அதற்காக மத்திய அரசு உழைத்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பெண்கள் மற்றும் மலைவாழ்மக்களின் முன்னேற்றத்தில் மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close