மாணவர்களுக்காக ஓட்டுநராக மாறிய ஆசிரியர்

  ஐஸ்வர்யா   | Last Modified : 09 Jul, 2018 04:03 am

udupi-teacher-buys-bus-turns-driver-all-to-ensure-students-don-t-drop-out-of-school

கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்காக அவரது சொந்த செலவில் மினி பேருந்து வாங்கியது மட்டுமில்லாது அதற்கு அவரே ஓட்டுநராக பணிபுரிந்துவருகிறார்.

கர்நாடகா மாநிலம், உடுப்பி மாவட்டத்தின் பிரஹ்மவர் தாலுக்காவில் உள்ள பாரலி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. சுற்றியுள்ள மலைப்பகுதியில் இருந்து மாணவர்கள் கடுமையான சிரமங்களை கடந்து பள்ளிக்கு வருகின்றனர். சுமார் 3 கி.மீ பாதுகாப்பற்ற இடங்களில் காடு, மேடு, மலைப்பகுதியில் நடந்துவந்து பாடம் படிக்கவேண்டியதால் மாணவர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர். இதனால் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவர்களே அதிகம். இதனால் அந்த பள்ளியை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இதனால் அந்த பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் ராஜாராம் மாணவர்கள் பள்ளிக்கு பாதுகாப்பாக சென்று வருவதற்கும், பள்ளியை மூடாமல் இருக்கவும் பெங்களூரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வரும் முன்னாள் மாணவர் விஜய் ஹெக்டே மற்றும் சில முன்னாள் மாணவர்களின் உதவியுடன் மினி பேருந்து ஒன்றை வாங்கினார். பேருந்துக்கு ஓட்டுநர் நியமித்தால் அதற்காக மாதம் சிறு தொகையை செலவிட வேண்டுமே என்ற எண்ணத்தில் தானே ஓட்டுநராக பணியாற்றிவருகிறார். 

மலை கிராமங்களுக்கு பேருந்தில் சென்று மாணவர்களை அழைத்துவந்து பாடம் சொல்லிக்கொடுத்தப்பின் மீண்டும் வீட்டில் விடும் பணியில் இறங்கினார் ராஜாராம். இதனையடுத்து பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 50-இல் இருந்து 90 ஆக உயர்ந்தது. பேருந்திற்கு இன்சூரன்ஸ் மற்றும் டீசலுக்கு ராஜாராம் அவரது சொந்த காசையே செலவழிக்கிறார். இதுபோன்று பள்ளியின் பிற அடிப்படை தேவைகளுக்கும் முன்னாள் மாணவர்களிடம் உதவி கேட்டுள்ளதாக ராஜாராம் கூறியிருக்கிறார்.


 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.