11 பேர் கூட்டுத் தற்கொலை சம்பவம்: வருத்தத்தில் டெல்லி ஓட்டல் அதிபரும் தற்கொலை  

  Newstm Desk   | Last Modified : 09 Jul, 2018 03:58 am

influenced-by-burari-mass-suicide-case-depressed-mumbai-hotelier-commits-suicide

டெல்லியில் 11 பேர் கூட்டுத் தற்கொலை செய்துகொண்ட செய்தியை தொலைக்காட்சியில் பார்த்த ஓட்டல் அதிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

மும்பை கோரேகாவ் கிழக்கு, ஃபிலிம் சிட்டி சாலையில் வசித்து வந்தவர் கிருஷ்ணா (63). இவர் அந்தேரி, சக்காலா பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். கடந்த சில ஆண்டுகளாக இவரது ஓட்டல் நஷ்டத்தில் இயங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார் கிருஷ்ணா. 

இந்த நிலையில், டெல்லி அரோரா பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பான செய்திகளை தொடர்ந்து டி.வி.யில் பார்த்து வந்துள்ளார். இதுகுறித்து தனது மகளிடம் அவர் அதிகம் விவாதித்துள்ளார்.

இதனிடையே வெள்ளிக்கிழமை காலை கிருஷ்ணா வெகு நேரமாகியும் படுக்கை அறையைவிட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி அறைக்குள் சென்று பார்த்தார். அப்போது, கிருஷ்ணா மின்விசிறியில் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார். பதறிப்போன அவரது மனைவி அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். 

ஆனால் மருத்துவமனையில் கிருஷ்ணாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடையவை

டெல்லியில் 11 பேரின் மர்ம சாவுக்கு மூடநம்பிக்கை காரணமா?- குழப்பதில் போலீஸ்

11 பேரின் மர்ம மரணம்: மந்திரவாதியை குறிவைக்கும் டெல்லி போலீஸ்!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.