பொதுமக்கள் 3 பேர் சுட்டுக் கொலை; மீண்டும் வெடிக்கிறதா காஷ்மீர்

  Newstm Desk   | Last Modified : 08 Jul, 2018 06:49 pm
kashmir-3-civilians-killed-in-protests

தெற்கு காஷ்மீரில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் பொதுமக்கள் 3 பேர் கொல்லப்பட்ட பிறகு, அங்கு மீண்டும் கலவரங்கள் வெடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரில், ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி புர்ஹான் வானி கொல்லப்பட்ட தினமான இன்று, அவருக்கு நினைவேந்தல் நடத்தி பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராடினர். அப்போது, சில இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறியது. தெற்கு காஷ்மீரில் ஹவூரா பகுதியில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த வன்முறையில், பொதுமக்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். 

இதனால் , காஷ்மீர் பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறலாம் என அஞ்சப்படுகிறது. 

தொடர்ந்து நடைபெற்று வந்த வன்முறை மற்றும் தீவிரவாத தாக்குதல்களின் விளைவாக காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முஃப்தியின் ஆட்சிக்கு பாரதிய ஜனதா கொடுத்து வந்த ஆதரவை திரும்பப்பெற்றது. ஆட்சி கவிழ்ந்த பிறகு, ஆளுநர் வோஹ்ரா ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அதன் பின், காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் குறையத் துவங்கியது. ஆனால், தற்போது மீண்டும் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளது, அங்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close