இந்தியா - ரஷ்யாவின் 2 லட்சம் கோடி ஜெட் ஒப்பந்தம் ரத்து?

  Newstm News Desk   | Last Modified : 09 Jul, 2018 04:05 am

india-in-doubts-on-2-lakh-crores-fighter-jet-deal-with-russia

ரஷ்யாவுடன் இந்தியா சேர்ந்து செய்திருந்த ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான ஃபைட்டர் ஜெட் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து 2007ம் ஆண்டு, ஃபைட்டர் ஜெட் விமான உற்பத்திக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன்படி, இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனங்களை உருவாக்கி, அதிநவீன ஜெட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டனர். ஆனால், இந்த திட்டத்தை செயல்படுத்துவதில், இரு நாடுகளுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. செலவை சரிசமமாக பிரித்துக் கொள்வதில் இரு தரப்புகளும் இன்னும் முடிவெடுக்கவில்லை என தெரிகிறது. 

மேலும், ரஷ்யாவின் நவீன 5வது தலைமுறை ஜெட் உற்பத்தி தொழில்நுட்பத்தை இந்தியா கோரியுள்ளதாம். ஆனால், அதை கொடுக்க ரஷ்யா மறுக்கிறது . அதனால், இந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய இந்தியா திட்டமிட்டு வருகிறது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close