ராமரால் கூட பாலியல் குற்றங்களை தடுக்க முடியாது: பா.ஜ.க எம்.எல்.ஏ

  Newstm Desk   | Last Modified : 09 Jul, 2018 04:11 pm
even-ramar-cant-stop-rape-says-up-bjp-mla

ராமரே நினைத்தாலும் இந்தியாவில் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க முடியாது என பா.ஜ.க எம்.எல்.ஏ சுரேந்தர சிங் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

அடிக்கடி சில கருத்துக்களை கூறி சர்ச்சையில் சிக்கி கொள்பவர் உத்தரபிரதேச பா.ஜ.க எம்.எல்.ஏ சுரேந்தர சிங். இவர் நேற்று ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பாலியல் வன்கொடுமை பற்றி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்ந்து நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவது பற்றி அவரிடம் கேட்ட கேள்விக்கு, "ராமரே நினைத்தாலும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்க முடியாது என்பதை நான் உறுதியாக சொல்கிறேன். இது இயற்கையாக உருவாகி உள்ள மாசு. மற்றவர்களை தங்கள் குடும்பத்தினர் போலவும், தங்கை போலவும் நடத்த வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. தனி மனிதர்களால் தடுக்க முடியுமே தவிர, சட்டத்திட்டங்களால் எதுவும் செய்ய முடியது" என்று கூறியுள்ளார். 

உன்னாவ் வன்கொடுமை பிரச்னை பெரியளவில் பேசப்பட்ட போது, எப்படி 3 குழந்தைகளின் தாயை ஒருவரால் வன்கொடுமை செய்ய முடியும். அதற்கு சாத்தியமே இல்லை. பொய்யான குற்றச்சாட்டு என்று கூறி சர்ச்சையில் சிக்கி கொண்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close