நிர்பயா வழக்கு: குற்றவாளிகளின் தண்டனை உறுதியாகுமா?

  Newstm Desk   | Last Modified : 09 Jul, 2018 12:25 pm
nirbhaya-gang-rape-case-sc-verdict-likely-on-pleas-of-convicts

நிர்பயா கொலை வழக்கில், மரண தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. 

டெல்லியில் கடந்த 2012 டிசம்பர் 16ம் தேதி நாட்டையே உலுக்கிய ஒரு கொடூர சம்பவ சம்பவம் அரங்கேறியது. நிர்பயா என்ற மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் ஓடும் பேருந்தில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பின்னர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி  டிசம்பர் 29 அன்று உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.  இவர்களில் ஒருவர் 18 வயதுக்கு குறைவானவர் என்பதால் 3 வருடங்கள் மட்டும் சிறைத்தண்டனை பெற்று விடுதலையானார். ஒருவர் சிறையில் தற்கொலை செய்துகொண்டார். இவர்கள் தவிர முகேஷ், பவன் குப்தா, வினய் ஷர்மா, அக்ஷய் குமார் ஆகிய நால்வருக்கும் உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது. 

இதையடுத்து, மரண தண்டைனையை எதிர்த்து முகேஷ், பவன் குப்தா, வினய் ஷர்மா ஆகிய மூவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதி அசோக் பூஷன், ஆர். பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது. குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்படுமா? அல்லது அதிலிருந்து தப்பிப்பார்களா? என்பது தீர்ப்பிற்கு பின் தான் தெரிய வரும். இதனால் வழக்கின் தீர்ப்பை நாடு முழுவதும் உள்ள மக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close