தாஜ்மஹாலில் தொழுகைக்கு அனுமதி இல்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 09 Jul, 2018 01:32 pm

no-namaz-at-tajmahal-sc

தாஜ்மஹாலில் இஸ்லாமியர்கள் தொழுகை செய்ய அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

உலகில் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என ஏடிஎம்(ADM) என்ற இஸ்லாமிய அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தது. பல மாதங்களுக்கு பிறகு இந்த வழக்கின் விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் மனுதாரர் தரப்பில், "தாஜ்மஹால் என்பது இஸ்லாமியர்கள் மதிக்கக்கூடிய ஒரு புனிதமான இடம். எனவே அங்கு செல்லும் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும்" என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இதற்கு அரசு தரப்பு, "தாஜ்மஹாலுக்கு அனைத்து தரப்பினரும் வருகை தருகின்றனர். எனவே அங்கு இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவது என்பது சரியாக இருக்காது" என எதிர்ப்பு தெரிவித்தது. 

இதையடுத்து, விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதிகள், "தாஜ்மஹாலில் இஸ்லாமியர்கள் தொழுகை செய்ய அனுமதிக்க முடியாது. தாஜ்மஹால் உலகில் ஏழு சின்னங்களில் ஒன்று என்பதையும் அது இந்தியாவின் வரலாற்றுச் சின்னம் என்பதையும் நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்" என கூறி இஸ்லாமிய அமைப்பின் கோரிக்கையை நிராகரித்தனர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close