பூரி ஜெகந்நாதர் கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி!

  ஐஸ்வர்யா   | Last Modified : 09 Jul, 2018 09:29 pm

no-entry-for-non-hindus-say-puri-jagannath-temple-servitors

ஒடிசாவில் உள்ள பூரி ஜெகந்நாதர் கோவிலுக்குள் இந்துக்கள் மட்டுமே நுழைய வேண்டும் என்று கோவில் நிர்வாக தலைவர் சங்கராச்சாரியா நிஷ்சலனந்தா சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் பூரி கடற்கரைப் பகுதியில் அமைந்த வைணவத் தலம் பூரி ஜெகந்நாதர் ஆலயம் ஆகும். இந்த ஆலயத்தில் ஜெகந்நாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்திரை தேவி ஆகிய மூவரும் ஒரே கருவறையில் இருந்து அருள்பாலிக்கின்றனர். இவர்கள் திருமேனி மரத்தால் ஆனது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இந்த மூன்று திருமேனிகளும் உரிய சடங்குகளுடன் புதியதாக மரத்தில் வடிக்கப்பட்டு ஆலயத்தில் வைக்கப்படும். இந்த ஆலயத்தில் எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும், கோவிலின் உச்சியில் இருக்கும் சுதர்சன சக்கரம் நம்மை பார்ப்பது போலவே இருக்கும்.

இத்தகைய பிரசித்து பெற்ற ஜெகந்நாதர் கோவிலில் இந்துக்கள் இல்லாத பிற சமூகத்தினரை அனுமதிக்கக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்து மதத்தை சாராதவர்களும் கோவிலினுள் நுழைய அனுமதி அளிப்பது குறித்து மறுபரிசீலனை செய்யும்படி கோவில் நிர்வாகத்தை கேட்டுக்கொண்டது. ஆனால் இதனை விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு ஏற்க மறுத்தது. இதையடுத்து கோவில் நிர்வாக தலைவர் சங்கராச்சாரியா நிஷ்சலனந்தா சரஸ்வதி, பூரி ஜெகந்நாதர் கோவிலினுள் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவதை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

newstm.in


 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close