மும்பையில் கனமழை பள்ளி கல்லூரிகள் விடுமுறை!!

  சுஜாதா   | Last Modified : 10 Jul, 2018 08:27 am

mumbai-schools-and-colleges-shut

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. மேலும் பலத்த மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. தொடர்ந்து, 4–வது நாளாக இன்றும் மழை நீடித்துவருகிறது. இடைவிடாமல் கொட்டி வரும் மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள், ரெயில் தண்டவாளங்கள், விமான ஓடுபாதைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து முடங்கி உள்ளது. மழை தீவிரமடைந்து வருவதால் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பலத்த மழை காரணமாக மும்பையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மும்பையில் இன்னும் சில தினங்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close