3 வயது மகனை ஆட்டோ மீது தூக்கி வீசிய தந்தை

  Newstm Desk   | Last Modified : 11 Jul, 2018 01:05 pm

father-bashes-3-year-old-son-against-auto

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையால் குடி போதையில் 3 வயது மகனை ஆட்டோவில் தந்தை தூக்கி வீசிய சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. 

ஹைதாரபாத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஒட்டுநர் சிவா. இவருக்கு திருமணமாகி மூன்று வயதில் மகன் உள்ளான். இவருக்கும் அவரது மனைவிக்கும் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இந்நிலையில் மனைவி மீது இருந்த கோபத்தில் சிவா குடித்துவிட்டு போதையில் தனது மகனை வீட்டிலிருந்து தூக்கி சென்றுள்ளார். 

அவர் பின்னாளேயே அவரது மனைவி ஓடிச்சென்றுள்ளார். குழந்தையை தலைக்கீழாக தூக்கிய சிவா, தனது ஆட்டோ மீது வீசினார். அதனை பார்த்ததும் அவரது மனைவி கூச்சலிட்டார். அவர் வேகமாக ஆட்டோ மீது அடித்ததால் அந்த குழந்தை மயக்கம் அடைந்தது. 

அருகில் இருந்தவர்கள் குழந்தையை அவரிடம் இருந்து வாங்க முயற்சி செய்தனர். இதனால், குழந்தையை இருக்கமாக பிடித்துக்கொண்டு சாலையில் அமர்ந்து சிவா கத்தி உள்ளார். பின் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் போலீசில் இது குறித்து புகார் அளித்தனர்.  போலீசார் அங்கு வருவதற்குள் சிவா சம்பவ இடத்தில் இருந்து தப்பித்துவிட்டார். இதுகுறித்து அவரது மனைவி புகார் அளிக்க மறுத்த நிலையில் போலீசார் குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிவா மீது வழக்கு பதிவு செய்தனர். மயக்கமடைந்த குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. உயிரிக்கு எந்தஆபத்தும் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளார். மேலும் தலைமறைவாகி இருக்கும் சிவாவை போலீசார் தேடி வருகின்றனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close