காவிரியில் இருந்து கூடுதல் நீர் திறக்க உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 11 Jul, 2018 01:06 am

karnataka-additional-water-should-be-released-to-tn-ordered-by-cm-kumaraswamy

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்க கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். 

தற்போது கர்நாடகாவில் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.  கபினி அணையில் தற்போது 37,000 கனஅடி நீர் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜா உள்ளிட்ட பல்வேறு அணைகளும் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. எனவே கர்நாடக அணையில் இருந்து கூடுதல் நீர் திறந்துவிட கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். நொடிக்கு தற்போது 35,000 கனஅடியில் இருந்து 38,000 கனஅடி நீராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close