மனைவிக்கு கொடுக்கும் பரிசுகளுக்கு வரிவிதிக்கக் கூடாது: மேனகா காந்தி

  Newstm Desk   | Last Modified : 11 Jul, 2018 11:28 am

menaka-gandhi-urges-fm-not-tax-assets-gifted-to-wives

டெல்லி: மனைவிக்கு கொடுக்கும் சொத்துக்களுக்கும், பரிசுகளுக்கும் வரி விதிக்க கூடாது என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. பல பெண்களின் வேண்டுகோளை அடுத்து நான் பீயுஷ் கோயலுக்கு முக்கியமான கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளேன். 

வருமான வரி சட்டம் 64ல் திருத்தம் கொண்டு வந்து மனைவிக்கு வழங்கும் சொத்து, பரிசுகளுக்கு வரி விதிக்க கூடாது என்று அதில் தெரிவித்துள்ளளேன். இந்தசட்டத்திருத்ததை செய்ய அரசு முன்வர வேண்டும். 1960ம்ஆண்டு மனைவி மற்றும் மருமகள்களுக்கு சுய வருவாய் இருக்காது என்பதை கருத்தில் கொண்டு இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி மனைவிக்கு அளிக்கப்படும் சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருவாய் கணவரின் வருவாயில் தான் சேர்க்கப்படும்.

ஆனால் பெண்கள் பல்வேறு துறைகளில் சுயமாக வருமானம் ஈட்டி வருகின்றனர். எனவே தற்போது இந்த முறை பாதிப்பை ஏற்படுத்தும். சொத்துக்களில் இருந்து பெறப்படும் வருவாய் தங்களது வருமானத்தில் சேர்க்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு பெண்கள் பெயருக்கு சொத்துக்களை மாற்ற தயங்குகின்றனர்" என்றார். 

மேலும் விவாகரத்து பெற்றவர்கள், கணவரை விட்டு பிரிந்து இருப்பவர்களின் குழந்தைகள் பான் (PAN) கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, தந்தை பெயரை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்ற திருத்தத்தை கொண்டு வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார். இதற்கு பலர் வரவேற்பு அளித்துள்ளனர். 

Newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close