ராஜ்யசபாவில் 22 மொழிகளிலும் பேசலாம்! - வெங்கையா நாயுடு அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 11 Jul, 2018 12:22 pm

rajya-sabha-members-can-speak-in-any-of-the-22-languages-this-monsoon-session

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, மாநிலங்களவையில் எம்.பிக்கள் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் பேசலாம் என மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார். 

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வருகிற ஜூலை 18ம் தேதி முதல் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடக்க இருக்கிறது. வழக்கமாக ராஜ்யசபா எம்.பிக்கள் இதுவரை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 17 மொழிகளில் பேச அனுமதி வழங்கப்பட்டிருந்தது.  முன்னதாக, மாநிலங்களவைத் துணைத் தலைவராக வெங்கையா நாயுடு பொறுப்பேற்ற போது, மாநிலங்களவையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 8வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளிலும் பேச வசதி ஏற்படுத்தப்படும் எனக்கூறினார். 

அதனை நிறைவேற்றும் வகையில்,  தற்போது மாநிலங்களவையில் 22 மொழிகளில் பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். மேலும் அவர், "ஒருவர் தனது எண்ணங்களை, கோரிக்கைகளை முன்வைக்கும் போது அவரது தாய்மொழியில் பேசினால் அது முழுமையாக வெளிப்படும்.

தாய்மொழி அல்லாது வேறு மொழியில் பேசுவது என்பது அவர்களுக்கு ஒரு குறைபாடாக தெரியும். எனவே எம்.பி க்கள் அவரவர் தாய்மொழியில் பேச வேண்டும் என்பதரகாக ஏற்கனவே இருந்த 17 மொழிகளுடன் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட டோக்ரி, காஷ்மீரி, கொங்கனி, சந்தாலி, சிந்தி ஆகிய 5 மொழிகளையும் சேர்த்து மொத்தமாக 22 மொழிகளில் பேச அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 18ம் தேதி முதல் நடக்க இருக்கும் மழைக்கால கூட்டத்தொடரில் இருந்து இது நடைமுறைக்கு வருகிறது. இதனை மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார். 

Advertisement:
[X] Close