தாஜ்மஹாலை மூடிவிடலாமா? - மத்திய அரசை கடுமையாக சாடிய நீதிமன்றம்

  Newstm News Desk   | Last Modified : 11 Jul, 2018 08:32 pm

supreme-court-slams-centre-over-tajmahal-maintanence

தாஜ்மஹாலை சீரமையுங்கள் இல்லையென்றால் மூடிவிடலாம் என்று மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளது உச்சநீதிமன்றம். 

இந்தியாவின் பெருமைகளுள் ஒன்றான தாஜ்மஹாலை சரியாக பராமரிப்பது இல்லை தொடர்பான வழக்கு குறித்த விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தது. இதில், "ஐரோப்பாவில் சுற்றுலா பயணிகளின் விருப்பமான இடமான ஈஃபிள் டவர் உண்மையில் பார்க்க டிவி டவர் போல உள்ளது.  அதனை பார்க்க 80 மில்லியன் மக்கள் பார்க்க வருகின்றனர். நமது தாஜ்மஹால் அதனை விட அழகாக உள்ளது. அதனை சரியாக பராமாரித்து வந்திருந்தால் அன்னிய செலாவணி பிரச்னைகள் தீர்ந்திருக்கும். 

இது போல எத்தனை விஷயங்கள் அழிந்திருக்கிறது. யாருக்கும் தாஜ்மஹாலை பாதுகாப்பதில் அக்கறை இல்லையா? அதனை சீரமையுங்கள் அல்லது மூடிவிடலாம்"  என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையை கடுமையாக சாடி உள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close