சத்தீஸ்கர்: போலீசார் என்கவுண்டரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை!

  Newstm Desk   | Last Modified : 06 Aug, 2018 01:43 pm

chhattisgarh-2-maoists-killed-in-sukma-district-of-bastar-division

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் நடந்த துப்பாக்கிச்சண்டையில், போலீசார் நடத்திய என்கவுண்டரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் நக்சல்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதியாகும். தொடர்ந்து இப்பகுதியில் நக்சல்கள் உள்நுழைவதும், போலீசார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டுவதுமாக தொடர்ந்து வருகிறது.  இந்த நிலையில், சுக்மா மாவட்டம் பஸ்தார் பகுதியில் நக்சல்கள் நுழைந்துள்ளதாக வந்த தகவலையடுத்து போலீசார் அங்கு சென்றனர். பின்னர் நக்சலைட்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். மேலும் கொல்லப்பட்ட நக்சல்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close