தமிழகத்தில் 'அம்மா உணவகம்' போல ஆந்திராவில் 'அண்ணா கேன்டீன்'

  Newstm Desk   | Last Modified : 11 Jul, 2018 03:56 pm

cm-chandrababu-naidu-launched-anna-canteen-in-andhra-pradesh

தமிழகத்தில் அம்மா உணவகம் போன்று ஆந்திராவில் 'அண்ணா கேன்டீன்' என்ற திட்டத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று தொடங்கி வைத்தார். 

தமிழகத்தில் அனைவருக்கும் உணவு கிடைக்கும் பொருட்டு கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று அம்மா உணவகம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது பிறந்தநாளன்று இந்த திட்டத்தினை அறிமுகப்படுத்தினார். அம்மா உணவகத்தில் மலிவு விலையில் காலை, மதியம், இரவு என மூன்று நேரங்களுக்கும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. காலையில் ரூ.1-க்கு இட்லி, மதியஉணவாக ரூ.5-க்கு சாம்பார் சாதம், லெமன் சாதம், கொத்தமல்லி சாதம், ரூ.3க்கு தயிர்சாதம், இரவு ரூ.3க்கு 2 சப்பாத்தி என குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் வயதான ஏழை மக்கள், சாலையோரங்களில் தங்கி இருப்பவர்கள் என  அனைவருக்கும் இது பயனுள்ளதாக இருக்கிறது.

இதே திட்டத்தை பின்பற்றி தற்போது ஆந்திராவில்  'அண்ணா கேன்டீன்' தொடங்கப்பட்டுள்ளது.  விஜயவாடா மாவட்டம் பவானிபுரம் பகுதியில் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இதனை திறந்து வைத்தார். ஆந்திராவில் இன்று மட்டும் 25 நகராட்சிகளில் 60 கேன்டீன்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், மாநிலம் முழுவதும் 110 நகராட்சிகளில் மொத்தமாக 203 கேன்டீன்கள் திறக்கப்பட உள்ளன. இதில் காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளைகளுக்கும் தலா ரூ.5க்கு உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close