66 ஆண்டுகள் பராமரித்த நகத்தை இன்று வெட்டும் சாதனையாளர்!

  Padmapriya   | Last Modified : 11 Jul, 2018 06:42 pm

pune-man-with-longest-fingernails-to-cut-them-after-66-years-flown-to-us-for-nail-clipping-ceremony

நீண்ட காலமாக நகம் வளர்த்து அதில் கின்னஸ் சாதனை படைத்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்ரீதர் சில்லால் 66 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக நகம் வெட்டுகிறார்.

மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் சில்லால் (88 வயது) என்பவர். கடந்த 1952ம் ஆண்டுமுதல் தனது இடது கையில் நகத்தை வெட்டாமல், நீளமாக வளர்க்க ஆரம்பித்தார் சில்லால். இதன் விளைவாக கடந்த 66 ஆண்டுகளில் அவரது இடது கையில் உள்ள ஐந்து விரல்களிலும் வளர்ச்சி அடைந்தது. நகங்களின் ஒட்டுமொத்த நீளம் 909.6 செ.மீ. இடது கை கட்டை விரலில் உள்ள நகத்தின் வளர்ச்சி மட்டும் 197.8 செ.மீ.  உலகிலேயே மிக நீளமான நகத்தை கொண்டவர் என்ற வகையில் கடந்த 2016ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் ஸ்ரீதர் சில்லால் இடம்பிடித்தார்.

இந்நிலையில், 66 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக தனது 88வது வயதில் நகங்களை வெட்ட உள்ளார். அமெரிக்காவின் பிரபலமான தொலைக்காட்சியில் வெளியாகும் உலகின் அதிசயமான செயல்கள் மற்றும் சாதனைகள் புரிந்தவர்களின் பதிவுகளை ஒளிப்பரப்பும் நிகழ்ச்சியில் ஸ்ரீதர் சில்லால் இடம்பெறுகிறார். பிலிவ் இட் ஆர் நாட் என்ற அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அமெரிக்காவுக்கு பறந்துள்ளார் அவர். அந்த தொலைக்காட்சி அலுவலகத்தில் ஆச்சரியப்பட வைக்கும் அரியப் பொருட்களை காட்சிக்கு வைக்கும் அருங்காட்சியகமும் உள்ளது.

அங்கு தன்னுடைய நகத்தை பதப்படுத்தி, பராமரித்து வைக்க அவர் ஆசைப்பட்டார். இதைத் தொடர்ந்த தொலைக்காட்சி நிறுவனத்திடம் இது தொடர்பாக அவர் கேட்டுள்ளார். அவர்களும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டனர். இதனால், கடந்த 66 ஆண்டுகளாக பேணிப் பராமரித்து வந்த தனது நகத்தை வெட்ட சில்லால் முடிவு செய்து அறிவித்துள்ளார். இன்று அவர் நகம் வெட்டப்பட உள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close