கர்நாடகாவில் தொடரும் மழை: கபினி அணையில் இருந்து 50,000 கனஅடி நீர் திறப்பு!

  Newstm Desk   | Last Modified : 11 Jul, 2018 06:07 pm

karnataka-to-relase-more-water-from-kabini-dam-due-to-heavy-rain

கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தமிழகத்திற்கு கபினி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 50,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்துவ வருகிறது. தொடரும் கனமழையினால் கர்நாடகாவில் உள்ள பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருக்கின்றன. மேலும்,  காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு முதற்கட்டமாக 15,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. மழையின் அளவு அதிகரித்துள்ளதால், திறந்து விடப்படும் நீரின் அளவு 25,000  கனஅடியாக உயர்த்தப்பட்டது. 

இதைத்தொடர்ந்து தற்போதும் கர்நாடகாவின் பெரும்பாலான காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 50,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் மேட்டூர் அணை 80 அடியை எட்டும் என கூறப்படுகிறது. அணையின் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படப்படலாம் என கூறப்படுகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close