டெல்லியில் மதிய உணவு சாப்பிட்ட 25 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

  திஷா   | Last Modified : 11 Jul, 2018 06:45 pm

25-students-fall-ill-after-consuming-mid-day-meal

டெல்லியில் மதிய உணவு சாப்பிட்ட 25 பள்ளிக் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். 

டெல்லி, நரேலா என்ற இடத்திலிருக்கும் அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட, 25 பெண் குழந்தைகளுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். 

ஃபுட் பாய்ஸன் ஆனதால் குழந்தைகள் சத்யவதி ராஜா ஹரீஷ் சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாக காவல்துறை தலைமை அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். வயிற்று வலியில் அவதிப் பட்ட குழந்தைகள் தற்போது நலமாக இருக்கிறார்கள் என மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதனால் பள்ளிகளுக்கு உணவுப் பொருட்களை விநியோகிப்பவர்களை நாளை சந்திக்க அழைத்திருக்கிறது டெல்லியின் கல்வித்துறை. கடந்த சனிக்கிழமை மற்றொரு பள்ளியில் இதே சம்பவம் நடைப்பெற்றிருந்த நிலையில், ஒரே வாரத்தில் இரண்டு முறை பள்ளிக் குழந்தைகள் உடல் நலம் குன்றிய செய்தி பெற்றோர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close