உன்னாவ் வழக்கு: பா.ஜ.க எம்.எல்.ஏ மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

  Newstm Desk   | Last Modified : 11 Jul, 2018 07:28 pm
unnao-rape-case-cbi-files-charge-sheet-against-bjp-mla-kuldeep-singh-sengar

உத்தரபிரதேசம் உன்னாவ் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் தந்தை கொல்லப்பட்ட வழக்கில், பா.ஜ.க எம்.எல்.ஏ மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் என்ற பகுதியில், பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் மற்றும் அவருடன் இருந்தவர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 17 வயது சிறுமி ஒருவர் போலீசில் புகார் அளித்திருந்தார்.  புகார் கொடுத்து ஒரு வருடமாகியும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தயநாத் வீட்டின் முன் சிறுமி தற்கொலைக்கு முயன்றார். பின் விவகாரம் வெளி உலகிற்கு தெரிய வந்தது. 

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமியின் தந்தை மர்மமான முறையில் உயிரிழந்தார். இதன்பின்னர், சிறுமிக்கு ஆதரவாக நாடு முழுவதும் குரல் ஓங்கின. பல்வேறு இடங்களில்  போராட்டங்களும் வெடித்தன. பின்னர், இந்த வழக்கை அலகாபாத் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் மற்றும் அவரது சகோதரர்  உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு விசாரணை  நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் மீது சிறப்பு நீதிமன்றத்தில்  சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் குல்தீப் சிங் சகோதரர், அதுல் சிங் பெயர் உள்பட ஐந்து பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close