விவசாயிகளை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே காங்கிரஸ் பயன்படுத்தியது: மோடி குற்றச்சாட்டு!

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2018 08:27 am

congress-used-farmers-as-vote-bank-betrayed-them-pm-narendra-modi

விவசாயிகளை வாக்கு வங்கியாக மட்டுமே காங்கிரஸ் கட்சி பயன்படுத்தியது என பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். 

சமீபத்தில் மத்திய அரசு நெல், சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கான ஆதார விலையை அதிகரித்தது. இதன் மூலம் விவசாயிகள் பெற்ற நலனை விளக்கும் வகையில், பஞ்சாப் மாநிலத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. இதில், பிரதமர் மோடி, ஹரியானா மாநில பா.ஜ.க முதல்வர் மனோகர் லால் கட்டார், மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதல், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் உள்ளிட்ட பல தலைவர்களும், பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநில விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றிய போது, "கடந்த 4 ஆண்டுகளில் விவசாய பொருட்களின் உற்பத்தி பெருகியுள்ளது. விவசாயிகளை நான் எப்போதும் மதிக்கிறேன், தலை வணங்குகிறேன். கோதுமை, நெல், பருத்தி என அனைத்து உற்பத்தியிலும் முன்னதை விட அதிக உற்பத்தி கிடைத்து வருகிறது. நீங்கள் கடினமான உழைத்தாலும் உங்களது தேவைகள் எதுவும் பூர்த்தியடையவில்லை. விரக்தியிலே உங்கள் வாழ்க்கை செல்கிறது.

இதற்கு முழு காரணம் கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் தான். காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்கும், அவர்களது உழைப்புக்கும் மதிப்பளிக்கவில்லை. விவசாயிகளை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே உபயோகித்துள்ளது. ஒரு குடும்பத்தை பலனில் மட்டுமேகாங்கிரஸ் அக்கறை கொண்டிருந்தது. விவசாயிகள் தான் நாட்டின் ஆன்மா போன்றவர்கள். அவர்கள் தான் தேசத்துக்கே உணவளிப்பவர்கள். ஆனால் அவர்களிடம் பொய் சொல்லி காங்கிரஸ் ஏமாற்றி வந்துள்ளது. 

எல்லைகளைக் காப்பதானாலும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதானாலும், பஞ்சாப் மக்கள் மற்றவரை கவரும் வகையில் செயல்பட்டு வருகின்றனர் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயக்கழிவுகளை எரிப்பதனால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. இதில் சுற்றியுள்ள மற்ற மாநிலங்களும் பாதிக்கப்படுகின்றன. இதனை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசு இதற்காக ரூ. 50 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. விவசாயக் கழிவுகளை எரிக்காமல் நிலத்திலேயே சேமித்து வைக்கலாம். இது உரமாகவும் செயல்படும். இதனால் ஒரு ஹெக்டேருக்கு ரூ.2000 வீதம் சேமிக்கலாம்" என்றார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close