நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தெலுங்கு தேசம் எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்!

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2018 09:23 am
tdp-to-raise-andhra-pradesh-special-status-issue-in-monsoon-session-of-parliament

வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என உறுதியளித்த மத்திய அரசு, அதனை நிறைவேற்றாததைக் கண்டித்து ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் மற்றும் எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது போராட்டம் நடத்தின. இரு கட்சிகளின் எம்.பிக்களும் தினந்தோறும் போராட்டம் நடத்தி வந்ததால் மசோதாக்கள் நிறைவேற்ற முடியாமல் போனது. இதனால் கூட்டத்தொடர் மிகவும் பாதிக்கப்பட்டது.

சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்பதால் தெலுங்கு தேசம் கட்சியும் பா.ஜ.கவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது.  நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவும் முயற்சி செய்து வந்தது. அதே நேரத்தில், காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அ.தி.மு.க, தி.மு.க எம்.பிக்களும் போராட்டம் நடத்தி வந்ததால் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில், ஜூலை 18 முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆளும் பா.ஜ.க அரசு கடைசி வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளதால் இந்த கூட்டத்தொடரில் முத்தலாக் உள்ளிட்ட முக்கிய  மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த அவையை புறக்கணிக்கும் வகையில், தெலுங்கு தேசம் கட்சியினர் செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close