ஃபீஸ் கட்டாததால் மழலைகளை அடைத்துவைத்த பள்ளி... டெல்லியில் கொடூரம்

  Newstm Desk   | Last Modified : 13 Jul, 2018 06:53 am

delhi-cm-kejriwal-visits-delhi-school-where-kg-students-were-locked-up

டெல்லியில் கட்டணம் செலுத்தாத  குழந்தைகளை அறைக்குள் அடைத்து வைத்த பள்ளிக்கு நேரில் சென்று முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆய்வு நடத்தினார். 

டெல்லியின் ஹாஸ் ஹாலி பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் கல்வி கட்டணம் செலுத்தாத 16 எல்கேஜி, யூகேஜி படிக்கும் குழந்தைகளை பள்ளி நிர்வாகம் கீழ்தளத்தில் தனியாக அடைத்து வைத்திருந்தது. காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை அந்த குழந்தைகள் அறைக்குள் இருந்துள்ளனர். 

இதுகுறித்து பள்ளி முடிந்ததும் பெற்றோர்களிடம் குழந்தைகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் பள்ளி நிர்வாகத்தின் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர். மேலும்  இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாநில பெண்கள் ஆணையம், காவல்துறை மற்றும் கல்வித்துறைக்கு இந்த சம்பவம் பற்றி நோட்டீஸ் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பள்ளிக்கு நேரில் சென்று குழந்தைகள் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர். பின்னர் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், இதுகுறித்து டெல்லி அரசு மற்றும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறியுள்ளார். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close