திருடுவதற்கு முன் நடனமாடிய திருடன் : வைரல் வீடியோ

  Newstm News Desk   | Last Modified : 12 Jul, 2018 08:39 pm

theif-dances-before-he-attempts-robbery

டெல்லியில் கடையில் கொள்ளையடிப்பதற்கு முன் நடனமாடிய திருடனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

டெல்லியில் உள்ள கடை வீதி ஒன்றில் கடந்த வாரம் 4 கடைகளில் பூட்டு உடைக்கப்பட்டு பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. 

அதில் கொள்ளை சம்பவம் பதிவாகி இருந்தது. அதில் 5 திருடர்களின் உருவம் பதிவாகி உள்ளது. அதில் இரண்டு  பேர் முன்னரே செல்ல, பின்னால் 3 பேர் வருகின்றனர். அதில் முதலில் வந்த இரண்டு பேரில் ஒருவன் திருடுவதற்கு முன்பு திடீரென்று நடனம் ஆட தொடங்கிவிட்டார். 

பின்னர் தனது கைக்குட்டையால் முகத்தை கட்டிக்கொண்டு கடை ஒன்றின் பூட்டை உடைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறாது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close