• கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார்: பா.ஜ தலைவர் அமித் ஷா
  • எம்.எல்.ஏ கொலையை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் ஆதரவாளர்கள்
  • கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி நீக்கம்
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அதிபர் ட்ரம்ப் தயார்: வெளியுறவுத்துறை செயலாளர்
  • நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

நிஜமாவே கிணத்த காணல! பூமிக்குள் மறையும் கிணறு- வைரலாகும் வீடியோ

  ஐஸ்வர்யா   | Last Modified : 12 Jul, 2018 06:34 pm

well-missing-at-kerala

கேரளாவில் கிணறு ஒன்று பூமிக்கு அடியில் செல்லும் காட்சிகள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னும் 2 நாட்களுக்கு பருவமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

இந்நிலையில், வயநாட்டில் மனந்தவாடி என்ற இடத்தில் உள்ள 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிணறு ஒன்று உள்ளது. நேற்று முன் தினம் கிணறு இருந்த பகுதியில்  நிலநடுக்கம் வந்ததுபோல் அதிர்வுகள் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். கடும் மழையில் அந்த கிண்று திடீரென உள்வாங்கியது. அப்பகுதி அப்படியே பூமிக்குள் சென்று மூழ்கியது. இதையடுத்து அப்பகுதி கிணறு இருந்த அடையாளமே தெரியாமல் மறைந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். கிணறு பூமிக்கடியில் காணாமல்போகும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதே பகுதியில் கடந்த 2016ம் ஆண்டும் இதேபோன்று கிணறு பூமிக்கடியில் சென்றது குறிப்பிடதக்கது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close