ஒரே தேசம், ஒரே தேர்தல்: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்: ஹமீத் அன்சாரி

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2018 08:08 pm
one-nation-one-election-is-assualt-on-democracy-hamid-ansari

ஒரே தேசம், ஒரே தேர்தல் கொள்கை இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என முன்னாள் குடியரசு தலைவர் ஹமீது அன்சாரி தெரிவித்துள்ளார். 

மக்களவைத் தேர்தலையும், அனைத்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்காக ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற திட்டத்தை  மத்திய அரசு வகுத்துள்ளது. இதற்கான முயற்சியில் இந்திய தேர்தல் ஆணையமும், மத்திய சட்ட ஆணையமும் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து பேசி உள்ள முன்னாள் குடியரசு தலைவர் ஹமீது ஹன்சாரி, "இந்திய நாடு என்பது பரந்து விரிந்த நாடு. இந்தியா போன்ற பெரிய நாட்டிற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து பேசுவது பயன் தராது. சட்டப்பேரவை தேர்தலின் போது கூட பல கட்டகங்களில் பாதுகாப்பு தேவை. எனவே ஒரே நாடு ஒரே தேர்தல் என்னும் போது நாடு முழுவதும் அதற்கான பாதுகாப்பை கொடுக்க முடியுமா?. இந்த தேரல்தல் முறை நடைமுறைக்கு வந்தால் அது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்" என்றார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close