சூப்பர்மேன் ஆளுநரால் இதைக்கூட செய்ய முடியவில்லை: உச்சநீதிமன்றம் காட்டம்

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2018 08:42 pm
sc-hits-delhi-lg-says-he-does-nothing

தன்னை சூப்பர் மேன் என்ற சொல்லிக்கொள்ளும் டெல்லி துணை நிலை கவர்னரால் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க முடியவில்லை என நீதிமன்றம் விமர்சித்துள்ளது. 

தலைநகர் டெல்லியில் அதிக அளவிலான குப்பைகள் குவிந்திருப்பது தொடர்பான பொதுநல வழக்கு இன்று உச்சீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் டெல்லி மாநகராட்சி  துணை நிலை ஆளுநரின் மேற்பார்வையில் உள்ளதாக அரசு தரப்பு வாதம் செய்ததது. அப்போது, நான் சூப்பர்மேன், "டெல்லியில் அனைத்து அதிகாரங்களும் எனக்கு தான் உண்டு என்று கூறிக்கொள்ளும் துணை நிலை ஆளுநர் குப்பைகளை அகற்ற இதுவரை ஏன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று கேள்வி எழுப்பினர். 

இதுகுறித்து துணைநிலை ஆளுநர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், குப்பைகளை அகற்றுவது மாநகராட்சியின் பணி என்றும், அதனை கண்காணிப்பதுதான் என்னுடைய பணியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மீது குற்றம் சுமத்த முடியாது என்று கூறிய நீதிபதிகள், தாம் தான் பொறுப்பு என்ற போதிலும் யாரும் கேள்வி கேட்க கூடாது என்ற வகையில் துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் செயல்படுவதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் குப்பையை அகற்றுவது முதல் மந்திரியா அல்லது துணைநிலை ஆளுநரா என மத்திய அரசு மற்றும் டெல்லி அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close