ஓரினச்சேர்க்கைக்கு அனுமதியா? - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து என்ன தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 13 Jul, 2018 01:49 pm
once-the-criminality-under-section-377-goes-everything-will-go-sc-on-homosexuality-case

இயற்கைக்கு மாறான உறவில் ஈடுபடுவதை குற்றமாகக் கருதும் 377வது பிரிவை ரத்து செய்துவிட்டால் சமூகத்தில் பல பாகுபாடுகள் நீங்கிவிடும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இயற்கைக்கு மாறான உறவில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க, சட்டப்பரிவு 377 வழிவகை செய்கிறது. இச்சட்டப்பிரிவை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் நேற்று 3வது நாளாக தொடர்ந்து விசாரணைக்கு வந்தது.

அப்போது,  ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிராக காட்டப்படும் பாகுபாடு நீக்கப்பட வேண்டும் என்ற கருத்து கடந்த சில ஆண்டுகளாக பேசப்படுகிறது என்றும், பாகுபாடு காரணமாக ஓரினச்சேர்க்கையாளர்கள் மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். 

விசாரணையில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் சி.யு.சிங், 377-ஆவது சட்டப்பிரிவை நீக்குவதால் மட்டுமே, ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான சமூகப் பாகுபாடு நீங்கி விடும் எனக் கூறி விட முடியாது எனக் குறிப்பிட்டார். அப்போது பேசிய நீதிபதிகள், பாலியல் விருப்பத்தின் அடிப்படையில் இந்த நபர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டக் கூடாது என்பது உண்மைதான் எனவும், ஓரினச்சேர்க்கை தடைப்பிரிவை நீக்கினால், தற்பாலின சேர்க்கையில் ஈடுபடுவோர் மீதான களங்கம் தீரும் எனவும் தெரிவித்தனர். மேலும் நீதிபதி இந்து மல்ஹோத்ரா, "ஓரினச்சேர்க்கை என்பது மாறுபாடு மட்டுமே பிறழ்ச்சி அல்ல" என்றார். 

முன்னதாக, இந்த வழக்கு கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, 377-ஆவது சட்டப்பிரிவை நீக்குவது குறித்து உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கே விட்டு விடுகிறோம் என்று மத்திய அரசு கூறியிருந்தது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close