தற்கொலையை லைவ் ரிலே செய்த இளைஞர் - 2750 பார்த்த அதிர்ச்சி சம்பவம்!

  Newstm Desk   | Last Modified : 13 Jul, 2018 05:02 pm

a-24-year-old-livestreams-his-suicide-2-750-people-watch-but-none-report

ஆக்ரா: ராணுவத்தில் சேர முடியாத விரக்தியில் உத்தரபிரதேச இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அதை அவர் ஃபேஸ்புக்கில் நேரலையாக்கியுள்ளார்.  அதனை சுமார் 2,750 பேர் பார்த்திருந்தும் ரிப்போர்ட் செய்து அவரைக் காப்பாற்ற முயற்சி எடுக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் முன்னா குமார் (24). பட்டதாரியான இவர் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்துள்ளார். இதற்காக நுழைவுத் தேர்வுகளில் பங்கேற்றும் வந்திருக்கிறார். ஆனால், 5 முறை ராணுவ நுழைவுத் தேர்வில் பங்கேற்றும் தேர்ச்சி பெறவில்லை.

இந்த நிலையில், புதன்கிழமை காலை, தமது ஃபேஸ்புக்கில் உள்ள நேரலை ஒளிபரப்பு வசதியில் பேசிய அவர், ராணுவத் தேர்வுகளில் பல முறை பங்கேற்றும் தன்னால் வெற்றிபெற முடியவில்லை என்றும், இதனால் அவரது பெற்றோர்கள் ஏமாற்றம் அடைந்துவிட்டதாகவும் கூறி, திடீரென சிறிது நேரத்தில் அங்கிருந்த தூக்குக் கயிற்றில் தொங்கி அவர் தற்கொலை செய்து கொண்டார். 

இந்தக் காட்சிகள் முழுவதும் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒளிபரப்பான போதும் இதுதொடர்பாக போலீசுக்கோ அல்லது முன்னா குமாரின் பெற்றோருக்கோ தகவல் தெரிவித்து அவர்களை எச்சரிக்கவில்லை. அந்த வீடியோவை 2,750 பேர் பார்த்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிகழ்வு கடும் கண்டனத்துக்கு உரியதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தடுக்கக் கூடிய தற்கொலை நிகழ்வை இந்தச் சமூகத்தின் பொறுப்பின்மையால் இத்தகை துயரம் நிகழ்ந்திருப்பதாக பலரும் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். 

இது குறித்து ஆக்ரா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முன்னா குமார் கடந்த சில நாட்களாவே விரக்தியடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் கவலையில் யாரிடமும் பேசவில்லை என்றும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close