ஆயுஷ்மான் பாரத் காப்பீடுத் திட்டத்துக்கு ஆதார் கட்டாயமில்லை: சுகாதார அமைச்சகம்

  Padmapriya   | Last Modified : 14 Jul, 2018 05:06 am

aadhaar-desirable-but-not-must-to-enrol-for-ayushman-bharat-scheme-health-ministry

ஏழைக் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் பாரத் என்ற தேசிய சுகாதாரத் திட்டம் திட்டத்துக்கு ஆதார் கட்டாயமில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் காப்பீடு என்ற திட்டத்தை மத்திய அரசு நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் அறிமுகம் செய்தது.  இது தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்கம் சில நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிவிக்கையில், இந்தத் திட்டத்துக்கு ஆதார் கட்டாயம் என குறிப்பிடப்பட்டிருந்தது. 

திட்டத்தின் பலனை பெற ஆதார் கட்டாயம் என்ற விதி வகுக்கப்பட்டிருப்பதால், இந்தத் திட்டம் ஏழை மக்களிடம் போய் சேராது என்ற விவாதமும் எதிர்ப்பும் எழுந்தது.

இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கமொன்றை அளித்துள்ளது. அதில், மத்திய சுகாதாரத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது ஆதார் அட்டையை ஒரு அடையாளமாக ஏற்பதில் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தது குறித்த வரைவு விவரம் மட்டுமே. ஆதார் இல்லாத காரணத்தால் எந்தப் பயனாளிக்கும் சேவை மறுக்கப்படாது எனவும் விளக்களித்துள்ளது.

மேலும், ஆதார் அட்டையை அடையாள ஆவணமாகக் கொடுப்பது பயனாளிகளின் விருப்பத்தைப் பொருத்தது என்றும், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அடையாள அட்டையையும் கூட ஆவணமாகக் கொடுக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close