காஷ்மீர் எல்லையில் தீவிரவாத தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலி!

  Newstm Desk   | Last Modified : 13 Jul, 2018 04:04 pm
j-k-two-crpf-jawans-killed-one-injured-in-militant-attack-in-anantnag

காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே நடந்த தாக்குதலில் இரண்டு சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் ஷீர்போரா பகுதியில்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது அங்கு நுழைந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்திய வீரர்கள் தரப்பும் தகுந்த பதிலடி கொடுத்தது. தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே தாக்குதல் நடைபெற்றது. இதில் சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இரண்டு வீரர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், தீவிரவாதிகளை தேடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close