நீட் வழக்கு: சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்ய முடிவு...கலந்தாய்வு தாற்காலிக நிறுத்தம்!

  Newstm Desk   | Last Modified : 13 Jul, 2018 05:05 pm

cbse-moves-supreme-court-against-hc-order-on-providing-grace-marks-in-neet

புதுடெல்லி: தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்ககோரிய மதுரைக்கிளையின்  உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. 

நீட் தேர்வுக்கு வழங்கப்பட்ட தமிழ் வினாத்தாளில் 49 வினாக்களில் பிழை இருந்ததாகவும், வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்களை கருணை மதிப்பெண்களாக வழங்க வேண்டும் எனவும், அந்த மதிப்பெண்களை சேர்த்து 2 வாரத்துக்குள் புதிய தரவரிசைப் பட்டியலை சிபிஎஸ்இ வெளியிட வேண்டும் எனவும் நீதிபதிகள்உத்தரவிட்டனர். இதையடுத்து மருத்துவ கலந்தாய்வில் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. 

தற்போது, மதுரைக்கிளையின்  உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. இதனால்  நாடு முழுவதும் மருத்துவ கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய சுகாதாரத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்திலும் ஜூலை 16, 17, 18 தேதிகளில் நடக்க இருந்த கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், புதிய கலந்தாய்வு தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் மருத்துவ கலந்தாய்வு மேலும் சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்படும் சூழல் உருவாகும்.  சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு கருத்தை கேட்ட பிறகே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.